Wednesday 21 January 2009

மாற்றம் தேவை



அமெரிக்காவுக்கு மட்டுமல்ல நமக்கும் மாற்றம் தேவை. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல அரசியல் மாற்றம் உலகம் முழுதும் உற்சாக எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது. இது ஒபாமா என்ற மனிதரின் மேல் உள்ள நம்பிக்கை என்பதை விட அவர் ஏற்படுத்தி உள்ள எதிர்பார்ப்பே காரணம் எனலாம்.குறிப்பாக பொருளாதார தொய்வு ஏற்படுள்ள இந்த நேரத்தில் ஒரு நல்ல தலைமை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நிலைமையை சீர் செய்யும் என்ற எண்ணமே அவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளது எனலாம்.
இந்தியாவும் தற்போது தேர்தலை எதிநோக்கி உள்ளது. ஒபாமா போல் ஒரு தலைவர் வர மாட்டாரா என மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்தியாவிலும் ஒரு கோடி ஒபமாக்கள் உள்ளனர்.ஆனால் இந்திய சமூக அரசியல் நிலைமை ஒபமாக்கள் வெளிப்பட ஒரு சூழ்நிலையை தர வாய்ப்பில்லை .
ராஜீவ் திடீர் பிரதமரான பொது இதே போல் ஒரு எழுச்சி இருந்தது. இவர் அவர் புதிய் இந்தியாவை படைப்பார் என்ற நம்பிக்கை எழுந்தது . அவரும் கள்ளம் கபடமற்ற வகையில் முதல் அடியை எடுத்து வைத்தார் . ஆனால் நம் நல்ல அரசியல் புண்ணியவான்கள் அவருக்கும் மருந்து வைத்து விட்டனர். விளைவு மக்கள் நம்பிக்கையை இழந்து தேர்தலில்.தோல்வி உற்றார். அதற்கு பின் எந்த ஒரு பிரதமரும் அது போன்ற எழுச்சியை உருவாக்க வில்லை.
தற்போது ராகுலை முன்னிறுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்டுகின்றன. அவரிடமும் தந்தையின் துடிப்பு உள்ளது. ஆனால் அரசியல் சாக்கடையில் எதிர்நீச்சல் போட்டு இலக்கை அடையும் வலிமை அவருக்கு உள்ளதா என்பது போக போகவே தெரியும்.
நமது பழுத்த புழுத்த அரசியல் வாதிகள் ஜாதீய , ஒட்டு வங்கி, வன்முறை, குடும்ப அரசியல் செய்தே பழக்கப்பட்டவர்கள். இவர்கள் மத்தியில் ஒபமாக்கள் உருவாவது என்பது இமாலய முயற்சி. கூறு கூறாக கூட்டணி கட்சிகள் நம் அரசியல் சூழ்நிலையை கெடுத்து வைத்துள்ள நிலையில் ஒபாமா அல்ல அவரது தாத்தா கூட ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த நிலை மாறி ஒரு கொபமொவோ , மொகபாவோ வருவார் என்று காத்திருப்போம்.

4 comments:

  1. புதிய வலைப் பூவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு மிக இளைய ஜனநாயக நாடு. எனவே இந்தியா ஜனநாயக ரீதியாக முதிர்ச்சியடையும் போது பல ஒபாமாக்கள் இந்தியாவிலும் தோன்றுவார்கள்.

    ReplyDelete
  3. // நமது பழுத்த புழுத்த அரசியல் வாதிகள் ஜாதீய , ஒட்டு வங்கி, வன்முறை, குடும்ப அரசியல் செய்தே பழக்கப்பட்டவர்கள்.//

    உண்மதாங்க.

    பாப்போம் நமக்கும் ஒரு ஒபாமா வேண்டுமானால்
    ஒரு கேஸ்ட்ரோவோ,சாவோசோவோதான் முதலில் வரவேண்டும்.

    மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது

    கண்டிப்பாக மாற்றம் வரும்.நம்பிக்கையோடு இருப்போம்.

    ReplyDelete