Thursday, 19 February 2009

ஆத்தா நான் ஜெயிலுக்கு போறேன்


சமீபெத்திய பத்திரிக்கை செய்தி.கைதிகளுக்குள் ஒரு தலைவர் தேர்ந்து எடுக்கபடுவார் .. கைதிகள் குறைகள் தீர்க்க அவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.


இதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது .. கைதிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து செயல்பட நல்ல தலைமை பண்பு கொண்ட ஒருவர் உதவுவார் .. இதனால் சிறைகளில் பிரச்னைகள் குறையும்..சிறைகள் அமைதி பூங்காவாக திகழும்..ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.ஆனா வேலியில் போகிற எதையோ வேட்டியில் விடுகிறார்களோ என்ற பயமும் வருகிறது.


ஏற்கனவே அரசியல் சாக்கடை கல்லூரிகளில் ஓடி இப்போது பள்ளிஅளவிலும் பரவி கொண்டு உள்ளது. பொதுவாக நம் நாட்டில் தலைமை பதவிகள் எல்லாமே போட்டி பொறாமை களுக்கு உட்பட்டவை. எனவே சிறைகளில் பதவிகள் ஏற்படுத்தப்பட்டால் அவை நெகடிவ் ஆன விளைவுகளை ஏற்படுத்துமோ என அஞ்ச தோன்றுகிறது.


நம் நாட்டில் எந்த தேர்தல் அமைதியாக நூறு சதவீதம் நியாயமாக நடக்கிறது.? அதுவும் குற்றம் செய்து தண்டனையை அனுபவித்து திருந்தி வெளியில் வர வேண்டிய கைதிகள் மத்தியில் தேர்தல்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? புதிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை அவை தோற்றுவிக்காதா? கட்ட பஞ்சயத்துகள் நடக்காதா?திரும்ப ஜெயிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்கு விக்காதா ?இப்பதே சிக்கன் முட்டை போட்டு நல்ல சாப்பாடும் போடுகிறார்கள்.புழல் போன்ற நவீன சிறைகளில் மேம்படுத்த பட்ட வசதிகள் உள்ளன.அய்யா அரசியல் பெரியோர்களே, அதிகார மன்னர்களே ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து உருப்படியாக இதை செய்யுங்கள்.

Wednesday, 4 February 2009

உதச்சது சரியா தப்பா ?மங்களூர் பப் (அதாங்க நைட் ஓட்டலு) விவகாரத்தில் கருத்து கந்த சாமிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு சாரார் பப் கலாச்சாரம் நமக்கு ஒத்து வராது. ஆக அங்கே ஆட்டம் போட்டவர்களை உதைத்தது சரி என்கிறார்கள்.
ஒரு சாரார் எல்லோருக்கும் எல்லாம் செய்ய சுதந்திரம் உள்ளதால் உதைத்த்து தப்பு என்கிறார்கள் .(முக்கியமாக சமுதாயத்தை பற்றி "ரொம்பவே " கவலை பட்டு கோடிகளில் புரளும் சினிமா ஆசாமிகள் )முத்தலிக் , மலேகன் எல்லாம் நமக்கு வேண்டாம். பப் பத்தி பேசுவோம்."இன்றைய வாலிப, வாலிபி களுக்கு ஓவர் வேலை, ஓவர் டென்ஷன்.. அதனால் பப் ஒரு ரிலாக்ஸ் செய்யும் இடம் ,, மற்றவர்களுக்கு தொல்லை தராமல் நல்லா பழகி நாலு சுவத்திற்குள் கும்மாளம் போட்டால் தப்பு இல்லை ". இது வாதி வக்கீல்.
" எங்க.. நமக்கு பிரச்னை பண்ற ஆளை போட்டு தள்ளினால் சூபெர் ரிலாக்ஸ் என்பதால் கொலை பண்லமா சார்..பப் கலாச்சாரம் கேன்சர் மாதிரி..மூளையை கெடுத்து தப்பு செய்ய தூண்டும் " இது எதிர் தரப்பு வக்கீல்.யுவர் ஆனர் தீர்ப்பு;


இள வயதில் தண்ணி மற்றும் பலதரப்பட்ட பழக்கங்களை சொல்லி தரும் பப் கலாச்சாரம் தரும் பாதிப்புகள் அதிகம். இந்தியர்களுக்கே உரித்தான தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக்கொண்டு வாழும் தன்மையை சிதைக்க கூடியது. மேலும் அமெரிக்க இரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற யாரையும் சான்று இருக்காத வாழ்க்கை முறை இங்கு இல்லை. நியு கிளியர் குடும்பங்கள் அதிகம் வந்து விட்டாலும் கூட்டு குடும்பம் என்ற அமைப்பு இன்னும் நன்றாக உள்ளதால் மட்டுமே நம் வாழ்க்கை ஒரு அமைப்பில் உள்ளது. இங்கு ஒரு ஆண் தன்னை சுற்றி வாழும் மற்றவர்களுக்கு ஒரு ஒழுக்க முள்ள சகோதரனாய் , கணவனாய் , தகப்பனாய் வாழும் கட்டாயம் உள்ளது. அதே போல் ஒரு பெண் நல்ல சகோதரியாய், மனைவியாய், அம்மாவாய் வாழ வேண்டும். மேலும் நம் குடும்ப முறை முற்றிலும் பெண்களை சார்ந்து உள்ளது. எனவே பெண்களுக்கு பொறுப்பு அதிகமாகவே உள்ளது..ஒழுக்கம் கெட்ட ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் நல்ல மனிதராக மதிக்க படுவதில்லை. அவர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது.("அட என்னப்பா லெக்சர் அடிக்கறே ! " சீக்கிரம் தீர்ப்ப சொல்லு )இதோ தீர்ப்பு :" கொஞ்ச நேரம் ஜாலிக்காக சகதியில் புரளுவதில் தப்பில்லை. ஆனால் வழுக்கி விழுந்து காலம் முழுக்க பன்றிகளாக அலைய வேண்டுமா ? பன்றிகளை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் சமுதாயத்தின் அருவெறுப்பான அடையாளங்கள்."